கைதடி அரச முதியோர் இல்லத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மேலும் 72 முதியவர்களிற்கு கொரோனா தொற்று உறுதியானது.
இததவிர, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியானது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் மட்டும் 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கைதடி அரச முதியோர் இல்லத்தில் ஏற்கனவே 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இன்று 152 பேருக்கு அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 72 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுதவிர, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சாவகச்சேரி பிரதேசசபை உபதவிசாளரும் உள்ளடங்குகிறார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் 9 பேருக்கு தொற்று உறுதியானது.