Pagetamil
இலங்கை

யாழில் மின்னல் தாக்கி இ.போ.ச சாரதி பலி!

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பகுதியில் இன்று மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

அதேயிடத்தை சேர்ந்த  தியாகராசா மதனபாலன் (40) என்பவரே உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் உழவு இயந்திரத்தின் மூலம் உழுது கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

அவர் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் திருமணம் முடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் பருத்தித்துறை சாலையில் இ.போ.ச சாரதியாக கடமையாற்றுகிறார்.

முடக்க காலத்தில் போக்குவரத்து சேவைகள் இல்லாததால், தனது சொந்த இடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட போது இன்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
3

இதையும் படியுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு

east tamil

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

Leave a Comment