முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது .
தாவடியில் உள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தற்போது நாட்டில் அமுலிலுள்ள பயணத் தடை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலோடு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர்,,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையான வி.தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோர் 1985ஆம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரெலோ அமைப்பினர் இந்த கொலைகளை நடத்தியதாக கருதப்படுகிறது.