பீகார் மாநிலத்தில் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்ற விசாரணை நடந்த போது, சட்டத்தரணி ஒருவர் உணவு சாப்பிட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், மீட்டிங்கில் கலந்து கொள்ள சூம் செயலியை பயன்படுத்துகிறார்கள். கொரோனா காலத்தில் நீதிமன்ற வழக்குகள் இப்படியான வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடந்து வருகிறது.
வீடியோ தொழில்நுட்பத்தில் வழங்கு விசாரணைகள் நடக்க தொடங்கிய பின்னர் சில விசித்திர சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அதிலொன்றே இது.
மயூர் சேஜ்பால் என்ற டுவிட்டர் பயனர் ஒருவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாட்னா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், தனது மதிய உணவை சாப்பிடுவதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் தனது வீடியோவை அப்போது அவர் நிறுத்தவில்லை. தான் ஆன்லைனில் இருக்கிறோம் என்பதும் அப்போது அவருக்கு தெரியவில்லை. இந்த வீடியோ வழி விசாரணையை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நடத்தினார்.
கத்திரசால் ராஜ் என்ற அந்த சட்டத்தரணி சாப்பிடுவது தெரிந்து, துஷார் மேத்தா அவரை மொபைலில் அழைத்து தெரியப்படுத்த, அந்த சட்டத்தரணி தனது தட்டை மறைத்து கொண்டார். தொடர்ந்து அவர் வழக்கில் கவனம் செலுத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
😂😂😂😂😂😂😂😂😂😂😂 pic.twitter.com/UBj9maFb2Z
— Mayur Sejpal | मयूर सेजपाल 🇮🇳 (@mayursejpal) March 5, 2021