வவுனியா மாவட்டத்தில் 28 நாட்களில் 2521 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக இம் மாதம் முதலாம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரை 2521 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 42 பேர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒட்சிசன் தேவையுடையோரின் எண்ணிக்கையும் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதனால், மக்கள் தமது பாதுகாப்பையும், சமூக பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும். அத்துடன் வீட்டில் இருந்து வெளியில் வருதை இயன்றவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.