60 வயதிற்கு மேற்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய மாவட்ட அளவிலான பட்டியலை மாவட்ட செயலாளர்களிடம் இருந்து உடனடியாக பெற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
அடுத்த சில நாட்களில் முழு மக்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போது சுகாதார அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
புதிய சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல பொறுப்பேற்ற பின்னர், GMOA உடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
18 வயதிற்குட்பட்டவர்ளுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1