வவுனியாவில் 2 மரணம்; 220 தொற்று!

Date:

வவுனியாவில் நேற்று 222 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், இருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 222 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், வவுனியா பூங்கா வீதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 86 வயது பெண் ஒருவரும் என இருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணித்த இருவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...

அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின்...

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்