கொழும்பு- திருச்சி சிறப்பு விமான சேவை ஆரம்பிக்கிறது!

Date:

கொழும்பு- திருச்சி விமான சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.

கொரோனா தொற்றையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. இதன்படி திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வந்த இலங்கைக்கான விமான சேவை முடங்கியது.

தற்போது கொரோனா விமான சேவைகள் வழக்கத்திற்கு திரும்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து கொழும்பு- திருச்சிக்கிடையில் சிறப்பு விமானங்கள் இயக்குவதற்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்து பயணிகளின் முன் பதிவையும் தொடங்கியுள்ளது.

அந்த விமானங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. திருச்சியிலிருந்து கொழும்புவிற்கு காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

இந்த விமான சேவை திருச்சியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

குகையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு மாதாந்த கொடுப்பனவு

'நக்கிள்ஸ்' சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலனை உறுதி செய்யவும்,...

குகைக்குள் வாழ்ந்த 15 வயது சிறுமியை மாமன், மருமகன் சீரழித்தனர்: விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்!

நக்கிள்ஸ் வனப்பகுதியின் அடர்ந்த, இருண்ட காட்டுக்குள், ஒதுக்குப்புறமான பாறைக் குகை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்