வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை வருகிற ஒக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் நடிகர் சூர்யா ஒரு மாதம் ஜல்லிக்கட்டுக் காளைகளை அடக்குவதற்காக பயிற்சி எடுக்க உள்ளாராம். செப்டம்பர் மாதம் இதற்கான பயிற்சியில் சூர்யா ஈடுபட உள்ளாராம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1