விஜய்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் ஐஸ்வர்யா ராய்க்கும்!

Date:

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து அவர் பட்டுப்புடவை, நகையுடன் இருக்கும் புகைப்படம் கசிந்து வைரலாகிவிட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திர லுக் புகைப்படம் எப்படி கசிந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தபோது சரத்குமார் தன் மகள்களுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய் குடும்பத்தாரை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம், வீடியோ, தகவல் கசிவது வழக்கமாக வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
பிரமாண்ட ஷாப்பிங் மால் செட்டில் படப்பிடிப்பு நடந்தது. சமீபத்தில் அந்த செட்டில் எந்த காட்சியை நெல்சன் படமாக்கினார் என்பது குறித்த தகவல் கசிந்துவிட்டது. பீஸ்ட் படம் குறித்த தகவல் கசிந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் லுக்கும் கசிந்திருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்