சத்தமின்றி சிறுவர்களை தாக்கும் ஆபத்து: திடீரென ஒட்சிசன் அளவு குறைகிறது!

Date:

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, ​​ திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் நலின் கிதுல்வத்த இதனை தெரிவித்தார்.

சுவாசக் கஷ்டம் அல்லது பேசவோ நடக்கவோ இயலாமை போன்ற எந்த முன் அறிகுறிகளும் இல்லாமல், எதிர்பாராத விதமாக ஒட்சிசன் அளவு குறைவதாக தெரிவித்தார்

ஓடுதல் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது, ​​குழந்தையின் இயல்பான நிலையில் இருந்து ஒட்சிசன் அளவு குறைகிறது. இது சைலண்ட் ஹைபொக்ஸியா என்று குறிப்பிடப்படுகிறது.

எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குழந்தையின் ஒட்சிசன் அளவை கண்காணிக்க அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சிறு செயல்பாட்டிற்குப் பிறகு குழந்தையின் ஒட்சிசன் அளவு 94 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லது ஓய்வெடுக்கும்போது ஒட்சிசன் அளவு 96 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது முக்கியம் என்று வைத்தியர் கிதுல்வத்த கூறினார்.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆறு படுக்கைகளிலும் கொரோனா தொற்றிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இணைக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மோசமான சூழ்நிலை எழுந்துள்ளது.

ஆல்பா வைரஸ் மாறுபாட்டோடு ஒப்பிடும்போது, ​​தற்போதைய வைரஸ் வகைகள் மிகவும் முக்கியமானவை என்று அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...

யாழில் சிக்கிய திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்