மட்டக்களப்பில் மீட்கப்பட்டது புலிகளின் துப்பாக்கியா?

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (23) மாலை மீட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காங்கேயனோடையில் உள்ள வெற்றுக் காணியொன்றில் களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்தே இந்த கைத்துப்பாக்கி மற்றும் மகசின்களை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த காணிக்குள் குறித்த துப்பாக்கியை வீசி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்