27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஆயுள்வேத சிகிச்சையால் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தாமல் இறக்க அனுமதிக்கும் சுகாதாரத்துறை மீது நடவடிக்கையெடுங்கள்: ஆயுள்வேத வைத்தியர் முறைப்பாடு!

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுள்வேத சுகாதாரப் பாதுகாப்பு முறையின் கீழ் சிகிச்சை அளிக்காமல், அவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தார்கள் என கூறி சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஆயுள்வேத வைத்தியரான பி.ஏ.ரத்னபாலா இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

ஆயுள்வேத மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவவரான அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்கள் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, சிசிர ஜெயக்கொடி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன.ஆகியோரின் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியமைக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 261, 289 மற்றும் 298 ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த புகாரை அளித்தார்.

அவரது முறைப்பாட்டில், கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் இறப்பைத் தடுக்கக்கூடிய உள்ளூர் மருத்துவ சிகிச்சையை அனுமதிக்காமல் இந்த வழியில் இறக்க அனுமதிப்பது கிரிமினல் குற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் உட்பட பல ஆயுள்வேத மருத்துவர்கள் கோவிட் -19 வைரஸை எதிர்த்துப் போராட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் உள்நாட்டு மருந்தை அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

இந்த நோயாளிகளை குணப்படுத்தும் உள்நாட்டு மருத்துவத்தின் திறன் இருந்தபோதிலும் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோயாளிகள் தினசரி இறப்பது நியாயமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் கோவிட் -19 நோயாளிகளுக்கு மேற்கத்திய மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்க அதிகாரங்களை வழங்குவதன் மூலம் சுகாதார சேவைகள் இயக்குநரின் தன்னிச்சையான முடிவால் இத்தகைய இறப்புகள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள்வேத மருத்துவக் சங்கத்தின் கீழ் சுதேச மருத்துவத் துறையில் சுமார் 20,000 பாரம்பரிய உள்நாட்டு ஆயுள்வேத மருத்துவர்கள் உள்ளதாகவும், தொற்றுநோய்களின் போது அவர்களின் பங்களிப்பு போதுமானதாகக் கருதப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment