இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிக அதிகமான மக்களை பாதித்து வருகிறது. நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் உயர்த்துவதோடு இன்னும் கடுமையான உடல் நல பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அவர்கள் கண்களில் பெரும் பாதிப்பை அடைகின்றனர்.
நீரிழிவு பிரச்சினையும் கண்பார்வைக் குறைபாடும்
நீரிழிவு நோயாளிகளின் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பைத் தான் டயாபெட்டிக் ரெட்டினோபதி என்று அழைக்கின்றனர். இந்த விழித்திரை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறியா விட்டால் கண் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது குளுக்கோமா, கண்புரை, நீரிழிவு பாப்பிலோபதி போன்ற ஏராளமான பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது சிறிய இரத்தக் குழாய்களில் அழுத்தம் உண்டாகி பாதிப்பு ஏற்படும். கண்ணுக்கு போகும் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் கண் பார்வை இழப்பு உண்டாகும்.
டயாபெட்டிக் ரெட்டினோபதி அறிகுறிகள் :
மங்கலான பார்வை தோன்றுதல்
பார்வையில் ஏற்ற இறக்கங்கள் உண்டாதல் கண்ணில்
இரத்தக் கசிவு காரணமாக சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றுதல்
நிறங்கள் தெரியாமல் போதல்
இரவு நேரங்களில் சரியாக பார்வை தெரியாமல் இருத்தல்
பார்வை இழப்பு
டயாபெட்டிக் ரெட்டினோபதி ஆபத்துக் காரணிகள்
நோயாளியின் வயது, பெரியவர்கள் அல்லது குழந்தைகளை விட வயதான நீரிழிவு நோயாளிகளுக்கு ரெட்டினோபதி வரும் ஆபத்து அதிகம்.
அதே மாதிரி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காத நபர்களுக்கு நீரிழிவு ரெட்டினோபதி வர வாய்ப்பு உள்ளது.
அதே மாதிரி ஒருவருக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து அறியாமல் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு ரெட்டினோபதி வரும் ஆபத்து அதிகம். தாமதமாக நீரிழிவு நோயை அறியும் போது அவர்களுக்கு முந்தைய கண்களில் பாதிப்பு ஏற்படலாம். எனவே ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை அளவை கண்டறிவது நல்லது.