அப்போ அவ்வளவுதானா ஸ்ருதி: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Date:

ஸ்ருதி ஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகிறார்கள். மும்பையில் லிவ் இன் முறைப்படி வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ஸ்ருதி. சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற இடத்தில் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை ஸ்ருதி வெளியிட்டதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசினார்கள்.

ஸ்ருதியும், சாந்தனுவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவரோ உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டார். அதற்கு ஸ்ருதி அளித்த பதில் தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தோன்றவில்லை. இது 2021ம் ஆண்டு, உலகில் நிறைய முக்கிய பிரச்சனைகள், கேள்விகள் எல்லாம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி. அப்படி என்றால் கடைசி வரை லிவ் இன் முறைப்படியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணமா என ஸ்ருதியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கல்யாணம் வேண்டாம் என்று உங்கள் மகள் சொல்கிறாரே ஆண்டவரே என சிலர் கமல் ஹாசனிடம் சமூக வலைதளத்தில் முறையிட்டிருக்கிறார்கள். முன்னதாக ஸ்ருதி இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் கார்சேலை திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அந்த காதல் முறிந்துவிட்டது. இந்நிலையில் தான் திருமணம் பற்றி இப்படி ஒரு பதில் அளித்திருக்கிறார்.

 

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்