பூமிக்கு சிவப்பு எச்சரிக்கை: முதன்முறையாக கிரீன்லாந்து பனிச்சிகரத்தில் பெரு மழை!

Date:

கிரீன்லந்து பனிக்கட்டியின் உச்சியில், வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் மழைப்பொழிவு பதிவானது. உலகின் அதிகரிக்கும் வெப்பநிலையால் அங்குள்ள பனிக்கட்டி வேகமாக உருகி உருகிவரும் நிலையில், வெப்பமடைவதற்கான மற்றொரு கவலைக்குரிய அறிகுறியாக இந்த மழைப்பொழிவை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

ஓகஸ்ட் 14 ஆம் திகதி 3.2 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பனிக்கட்டியின் சிகரத்தில் பல மணி நேரம் மழை பெய்தது. அங்கு வெப்பநிலை ஒன்பது மணிநேரத்திற்கு மேல் உறைபனி நிலைக்கு மேல் இருந்ததாக அமெரிக்க தேசிய பனி தரவு மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழமையாக பனிக்கட்டியின் வெப்பநிலை கிட்டத்தட்ட உறைபனியை விட அதிகரிப்பதில்லை. ஆனால் இப்போது ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில் மூன்று முறை அதிகரித்துள்ளது.

ஓகஸ்ட் 14 முதல் ஓகஸ்ட் 16 வரை மூன்று நாட்களில் மொத்தம் 7 பில்லியன் தொன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்தது.  இது 1950 ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவான மிகப்பெரிய மழைவீழ்ச்சியாகும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமண்ட்-டோஹெர்டி எர்த் அப்சர்வேட்டரியின் பனிப்பாறை நிபுணர் இந்திராணி தாஸ் கூறுகையில், “இது பனிப் படலத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி அல்ல. பனியில் உள்ள நீர் மோசமானது. இது பனித் தகடு மேற்பரப்பு உருகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.”

வழக்கமான பனியை விட நீர் சூடாக இருப்பது மட்டுமல்லாமல், அது இருட்டாகவும் இருக்கிறது – எனவே பனிக்கட்டியின் மேற்பரப்பில் உள்ள நீர், சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதற்கு மாறாக உறிஞ்சுகிறது. இதனால் பனிப்படலம் உருகுகிறது.

அந்த உருகும் நீர் கடலில் பாய்கிறது, இதனால் கடல் மட்டம் உயரும்.

கடந்த 20,30 ஆண்டுகளாக உலகக் கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதில் 25 விழுக்காட்டு உயர்வுக்கு, கிரீன்லந்தின் பனிக்கட்டியில் இருந்து உருகும் நீரே காரணம் என்று கூறப்பட்டது. அண்டார்டிகாவிற்கு பின்னர் கிரீன்லாந்திலிருந்தே அதிகமாக நீர் உருகி வெளியேறி வருகிறது.

உலக வெப்பநிலை அதிகரித்து வரும் வேளையில், அந்த விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்