ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித்திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரின் ஏற்ப்பாட்டில் இன்று காலை அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது A9 வீதி- நீதிமன்றத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
குறித்த நடவடிக்கைகளை மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் பார்வையிட்டிருந்ததுடன் குறித்த செயற்பாட்டினை அனைத்து பகுதிகளிற்கும் விஸ்தரிப்பது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.




