பந்துவீச சிரமமான 3 துடுப்பாட்டக்காரர்கள்: அலன் டொனால்ட்!

Date:

நான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த டெக்னிக்கல் பேட்ஸ்மன், பந்துவீச சிரமப்பட்டு 3 வீரர்களுக்குத்தான் என்று தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் தனது வாழ்க்கையில் பந்துவீச சிரமப்பட்ட 3 பேட்ஸ்மேன்கள் குறித்து யூடிப்பில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நான் 3 பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசச் சிரமப்பட்டேன் என்று சந்தேகமில்லாமல் கூறுவேன். 3 பேட்ஸ்மேன்களும் 3 விதங்களில் நெருக்கடி கொடுப்பார்கள். டெக்னிக்கல் ரீதியாக சிறந்த பேட்ஸ்மேனான சச்சினுக்குத்தான் பந்துவீசுவது மிகக்கடினம். நான் சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே பந்துவீசச் சிரமப்பட்ட முதல் பேட்மேன் சச்சின்தான்.ஏனென்றால், தென்னாபிரிக்காவில் சச்சின் பேட்டிங் செய்ய பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் இந்தியஅணியில் வேறு யாரும் அப்போது பயன்படுத்தியதில்லை.

நாங்கள் வீசும் பந்துகளை தாமதமாகத்தான் விளையாடி, தாமதமாகவே பந்தை லீவ் செய்வார். சச்சின் கிரீஸில் ஒருமணிநேரம் நிலைத்து நின்று 20 அல்லது 30 ரன்கள்சேர்த்துவிட்டால், அது எதிரணிக்கு ஆபத்தாக முடியும், அன்று முழுவதும் சச்சின் பேட் செய்வார். டெக்னிக்கலாக பேட்செய்வதில் சச்சின்தான் நம்பர் ஒன்.

2ஆவதாக மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்தவரை எந்த ஆடுகளமாக இருந்தாலும், பந்தை நிதானமாகக் கணித்து தடுத்து ஆடுவார். நான் சில போட்டிகளில்தான் லாராவுக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். லாராவை விரைவாக ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் அவர் மிகவும் ஆவேசமாக ஆடத் தொடங்கிவிடுவார்.

லாராவின் சில ஷொட்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். வளைந்து நெளிந்து, பின்பக்கம் குதித்து லாரா பேட் செய்யும்போது சிரிப்பு வரும். நம்ப முடியாத வேகத்தில் கால்களையும், கைகளையும் நகர்த்தி ஆடக்கூடியவர் லாரா. லென்த்தின் பந்து பட்டு லெக்சைடில் ஒதுங்கினால் அது பவுண்டரியில்தான் இருக்கும். நான் சந்தித்த புத்திசாலியான பேட்ஸ்மேன் லாரா.

கடினமான மற்றும் எதிர்த்து நிற்கும் பேட்ஸ்மேன், பல நேரங்களில் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியவர் ஸ்டீவ் வோ. மிகப்பெரிய வியப்புக்குரிய வகையில் ஸ்டீவ் வோ ஏதும் பேட் செய்தது இல்லை. இதை நான் சொல்லும்போது ஸ்டீவ் என்னை மன்னிப்பார் என நம்புகிேறன். ஆனால் அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது அதில் சிறப்பாக ஆடும் மன வலிமை கொண்டவர் ஸ்டீவ் வோ என டொனால்ட் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

3 பேர் கொலைச்சம்பவம்: சந்தேகநபர்களை பிடிக்க பொதுமக்களிடம் உதவி!

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலம் மீதான விசாரணை நிறைவு: தடுப்புக்காவல் காலத்தை 48 மணித்தியாலமாக குறைத்தது அரசு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

உக்ரைனின் வடிவம் சற்று மாறி போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப்

நவம்பர் 9 அன்று '60 மினிட்ஸ்' (60 Minutes) நிகழ்ச்சிக்கான நேர்காணலில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்