வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை!

Date:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதற்கிடையே, போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி பேஸ்புக் மூலம் விடுத்து இருந்த வேண்டுகோளை மரியா பார்த்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை மரியா ஆன் லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது.

அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார். அதேநேரம், பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றில் எச்சரித்தபடியே அதிகாலையில் தீக்குளித்து உயிரை மாய்த்த முதியவர் – மட்டக்களப்பில் அதிர்ச்சி!

மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்கு சாதகமாக நீதி வழங்காவிடில் தற்கொலை செய்வேன்...

இலங்கையில் 15% பெரியவர்களுக்கு நீரிழிவு

இலங்கையில் சுமார் 15 சதவீத பெரியவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். இவர்களில்...

சாவகச்சேரி விபத்தில் தந்தை, மகன் பலி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் - பருத்தித்துறை வீதியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்