தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்றும் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசை வலியுறுத்தினார்.
“ஆப்கானிஸ்தானில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது ஜிகாத் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களின் மையமாக மாறும். எனவே அந்த நாட்டில் புதிய நிர்வாகத்தை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது. இலங்கை தனது இராஜதந்திர பணியை மூட வேண்டும். ஆப்கானிஸ்தானிற்கான அலுவலகத்தை அதே பிராந்தியத்தில் மற்றொரு நாட்டில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்கவும், “என்று அவர் கூறினார்.
“ஆப்கானிஸ்தான் கடந்த முறை தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாத மையமாக மாறியது. புதிய ஆப்கானிய ஆட்சியுடன் இராஜதந்திர உறவுகள் தொடர்ந்தால் இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும்” என்று அவர் எச்சரித்தார்.




