25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியார் பகீர் வாக்குமூலம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே கங்காபூர் கிராமத்தில் வசித்து வருபவர் போண்டுபாபா. இவரது இயற்பெயர் ஹமில் ஹுலாம். இவர் தன்னை ஒரு சாமியாராக அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பகுதியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 27 வயதான இளம் பெண் ஒருவரிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அப்பெண்ணை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில் கங்காபூர் போலீசார் போண்டுபாபா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவராம், அசோக் புஜ்பால் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிவராம், அசோக் புஜ்பால் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரிந்தவர்கள். அவர்கள் இருவரும் அந்த பெண்ணை அணுகி நிர்வாணமாக பூஜை செய்தால் பண மழை கொட்டும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய அப்பெண்ணும், போண்டுபாபா ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு இருக்கிறது!
ஆசிரமத்தில் அப்பெண்ணை நிர்வாணமாக அமர வைத்து பூஜை என்ற பெயரில் அப்பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சுமார் 6 முதல் 7 மாதங்கள் அப்பெண்ணை டார்ச்சர் செய்து போண்டுபாபா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் அவர்களது தொந்திரவு தாங்க முடியாமல் அப்பெண் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், போண்டுபாபா மற்றும் அவரது இரு கூட்டாளிகளை கைது செய்த போலீசார், இதுகுறித்து மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு பெண்ணை மட்டும்தான் அவர் இவ்வாறு செய்தாரா அல்லது வேறு பெண்களையும் இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment