வவுனியா வடக்கு பிரதேச செயலார் இ.பிரதாபன் மற்றும் அங்கு பணிபுரியும் 2 உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் அங்கு கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களிற்கு சுகவீனம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களிற்கு இன்றையதினம் சுகாதார பிரிவினரால் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1