24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

போராட்டக்காரர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதிகளிற்கு அழுத்தமா?: சட்டத்தரணிகள் சங்கம், ஜேவிபி எதிர்ப்பு!

நீதிமன்ற அதிகாரிகளுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாநாடு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இரண்டு நீதிபதிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படும், ஊடகங்களில் வௌியான சில விடயங்கள் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தொற்று நிலைமைக்கு மத்தியில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றவியல் வழக்கின் ஏற்பாடுகளிலுள்ள சரத்துக்களை பயன்படுத்தும் விதம் தொடர்பில் நீதிமன்ற அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குதல்,
எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கு பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு அழுத்தம் விடுக்க முயற்சிக்கப்பட்டதாக, நீதிமன்ற அதிகாரிகளிடையே நிலைப்பாடொன்றை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களிற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டதாக கூறப்படுவதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, வழக்கின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, வேறு விடயங்களை ஆராய்வதிலிருந்து சுதந்திரமாக நீதிமன்ற அதிகாரிகள் செயற்படுகின்றார்கள் என்ற நம்பிக்கை வழக்குத் தொடுனர்களுக்கும் அவர்களின் சட்டத்தரணிகளுக்கும் காணப்படல் வேண்டும்.

இந்த விடயம், நீதிமன்ற சுயாதீனம் மற்றும் சட்டவாட்சியின் அடிப்படையாகும் என்ற புரிதல் நீதிபதிகளுக்கு உள்ளதென கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதியை நிலைநாட்டுவது மாத்திரமன்றி, நிலைநாட்டப்படும் என காண்பிக்க வேண்டியதும் அவசியமானது என்ற நிலைப்பாட்டிற்கு, தற்போது வௌியாகும் விடயங்கள் முரணானவை என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த மாநாட்டின் மூலம், நீதிமன்ற விடயங்களை நிறைவேற்றுகையில், அதனை முன்னெடுக்க வேண்டிய விதம் தொடர்பில் அழுத்தம் அல்லது நீதிமன்றம் சார்ந்த எண்ணம் மற்றும் விருப்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதென்று, நீதிபதிகள் அல்லது பொதுமக்களின் மனங்களில் தோன்றக்கூடாது என சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் சட்டக்கோட்பாடு இல்லாமற்போனால், இந்த நிறுவனங்கள் சுயாதீனமானவை என்ற நிலைப்பாடு குறைவடையும் அல்லது அற்றுப்போகும் என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபி தலைவர் அநுரகுமார திசநாயக்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இதில், மாநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கு பிணை வழங்குவது தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் அங்கு உரையாற்றினார். கைதாகுபவர்களை எந்தெந்த சட்டங்களின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கலாமென்பதை விளக்கமளித்தனர். பிணை வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் தவறானவை என கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கள் நீதிபதிகள் பதவி உயர்வு, வெளிநாட்டு புலமைப்பரிசில்களில்  செல்வாக்கு செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதுவா ஜனநாயகம் என கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க 2 வாரங்கள் அவகாசத்தை நீதியமைச்சர் கோரிள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒன்றரை மாதத்தில் நாட்டை மாற்றும் திட்டம்: அமைச்சர் ஆனந்த விஜயபாலின் உறுதி

east tamil

ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இணை நடவடிக்கைக்கு திட்டம்

east tamil

நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

எதிர்ப்புகளை புறக்கணித்து, மாற்றத்திற்கான பயணத்தில் அரசாங்கம்

east tamil

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

east tamil

Leave a Comment