அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சகத்தை நிறுவ அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறை புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நேற்று அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளுக்கு இணங்க அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு, தேசிய பட்ஜெட், அரசமுதலீடுகள் மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக கொள்கைகள் வகுத்தல் ஆகியவற்றுடன் கொள்கைகளை வகுக்கும் பணியுடன் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறையும் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.



