சுகாதார அமைச்சின் சாத்தியமற்ற சுற்றறிக்கைகளினாலேயே சடலங்கள் தேங்குகிறது!

Date:

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனாவினால் பலியான நபர்களின் பிரேத பரிசோதனையை நடத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் காரணமாக தங்களுக்கு கடுமையான சுமை இருப்பதாக இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சில மருத்துவமனைகளில் சடலங்கள் குவிந்து கிடப்பதாகவும், இதற்கு சுற்றறிக்கைகள் காரணமாக உள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரண விசாரணை செய்பவர்கள் தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடும் போது நடைமுறை சாத்தியமான உத்தரவுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் சங்கம் கேட்டுக் கொண்டது.

ஹட்டனில் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சங்கத்தின் ஊடக செயலாளர் மொஹமட் ஃபாசிர் கூறுகையில், அண்மைய சுற்றறிக்கைப்படி வீடுளிலேயே உயிரிழப்பவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் நடைமுறை சாத்தியமின்மை இருப்பதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்