யாழில் பொலிஸ் என கூறி மூதாட்டிகளிடம் கொள்ளையிட்டவர் கைது!

Date:

தன்னை பொலிஸ் என கூறி தந்திரமான முறையில் நகை, பணம்  கொள்ளையடித்த நபரை யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவினர் கைது செயதனர்.

யாழ் நகரப்பகுதி, நாவற்குழி, அரியாலை, மானிப்பாய் போன்ற இடங்களில் தனிமையில் நடமாடும் வயோதிப பெண்களை குறிவைத்து அவர்களிடம் சென்று தன்னை பொலிஸ் என அறிமுகப்படுத்தி பேச்சு கொடுத்து, அவர்கள் அசரும் நேரம் பார்த்து அவர்கள் உடமையில் இருக்கும் நகை, பணம் தொலைபேசி என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 வாரங்களில் 6 இடங்களில் குறித்த நபர் கொள்ளை சம்பவஙகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை குற்றத்தடுப்புபிரிவு பொலிஸார் மேற்கொண்டனர். யாழ் பொலிஸ்நிலைய புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் நாவற்குழி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2 தங்கச் சங்கிலி 17,000 ரூபாய் பணம் உடபட மூன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளைப்பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இதேவேளை குறித்த கொள்ளைச்சம்பவங்களிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரினது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.குறித்த கைது நடவடிக்கை யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி நெவின் பிரியந்த தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான விஜயகாந்த் வாகிசன் போன்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் தேசிய பூங்காக்களில் பிகினி புகைப்படப் படப்பிடிப்புகள்? விசாரணை ஆரம்பம்

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி ஆடைகளில் புகைப்படப் படப்பிடிப்புகள்...

ருவன்வெலிசாயவில் இரு தரப்பினரிடையே மோதல் – தேரர் ஒருவருக்குத் தலையில் காயம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இன்று (12)...

பொறுப்பற்ற வாகன ஓட்டத்தால் பறிபோன உயிர் நிசாம் ஹாஜியாரின் மரணத்திற்கு நீதி கோரி பட்டியடிப்பிட்டியில் பேரணி

பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத வாகன ஓட்டத்தால் வீதிகளில் அநியாயமாகப் பறிபோகும் உயிர்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்