26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

ஆண்களே அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்வதற்கான அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்

மனித வாழ்க்கைக்கு சுகாதாரம் மிக முக்கியமான அம்சமாகும். விலங்குகளில் இருந்து நம்மை இந்த சுகாதாரம் என்கிற விஷயமே முக்கியமானதாக வேறுபடுத்தி காட்டுகிறது. மேலும் ஆரோக்கியமே நம்மை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே ஆரோக்கியமாக இருப்பது முக்கியமாகும்.

சாதாரணமாக நாம் சோப்பு போட்டு குளிக்கும்போது உடலின் அனைத்து பகுதிகளிலும் அவற்றை சுத்தம் செய்வதில்லை. தலை முடி மற்றும் நமது அந்தரங்க பகுதிகள் போன்றவைகளை நாம் தனியாக சுத்தப்படுத்த வேண்டும். இதுவே அந்தரங்க சுகாதாரம் என அழைக்கப்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு அந்தரங்கப் பாகமானது சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போலவே ஆணுக்கும் சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். ஆனால் இங்கு ஆண்களின் அந்தரங்க பாகங்களின் சுகாதாரம் குறித்து அதிகமாக பேசப்படுவது இல்லை. எப்போதும் பெண்களின் அந்தரங்க சுகாதாரம் குறித்தே பேசப்படுகிறது. மேலும் ஆண்களின் சுகாதாரம் குறித்து சில கட்டு கதைகள் உள்ளன. அவை உண்மையா பொய்யா என இப்போது பார்க்கலாம்.

தினமும் குளிப்பவர்களுக்கு அந்தரங்க சுகாதாரம் தேவையில்லை. அவர்களுக்கு ஏற்கனவே அந்தரங்க பாகங்கள் சுத்தமாக இருக்கும். தினமும் குளிப்பது ஒரு நல்ல பழக்கமாகும். ஆனால் அதற்காக அது நமது மொத்த உடலையும் சுத்தப்படுத்தும் என கூறிவிட முடியாது. வழக்கமாக குளிப்பதற்கு நாம் சோப்பு பயன்படுத்துகிறோம். பலர் தங்கள் அந்தரங்க பகுதிகளை சோப்பு சுத்தப்படுத்தி விடும் என நினைக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை சோப்பு கொண்டு மட்டும் கழுவி விட முடியாது. உதாரணமாக நமது தலைமுடியை சோப்பு கொண்டு மட்டும் சுத்தப்படுத்த முடியாது. எனவேதான் நாம் ஷாம்பு பயன்படுத்துகிறோம். எனவே இப்படியான நெருக்கமான பாகங்களுக்கு தனி கவனம் செலுத்தி அதை சுத்தப்படுத்த வேண்டும்.

ஆணுறைகள் தூய்மை சார்ந்த பிரச்சனையை சரி செய்கின்றன
உடலுறவின் போது கருத்தடைக்காகவும் பாதுகாப்பான உடலுறவிற்காகவும் பயன்படுத்தப்படும் பொருளே ஆணுறை. அதை பயன்படுத்துவதால் அந்தரங்க பாகங்களை தூய்மை செய்ய தேவையில்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறான கூற்று. உடலுறவிற்கு முன்னும் பின்னும் அந்தரங்க பாகங்களை கழுவுதல் என்பது மிகவும் அவசியமான விஷயமாகும். ஆனால் ஆணுறைகள் பயன்படுத்தும் சில ஆண்கள் குறைந்தப்பட்சம் அதை கூட செய்வதில்லை. அவர்கள் ஆணுறை பயன்படுத்தியதால் சுகாதாரமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆணுறைகள் இராசாயன பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. எனவே அவை உங்கள் தோலில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே உடலுறவிற்கு முன்னும் பின்னும் சுகாதாரமாக இருப்பது நல்லது.

சோப்புகள் உடலுக்கு நன்மை பயக்கின்றன நாம் பயன்படுத்தும் சோப்புகள் அல்லது பாடி வாஷ்கள் நமது சருமத்திற்கு நன்மை பயப்பதாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அந்தரங்க பாகங்களுக்கும் அதே நன்மையை அளிக்கிறது என கூறிவிட முடியாது. ஏனெனில் அந்தரங்க பாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. சில வகை சோப்புகளில் கடினமான இராசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை அந்தரங்க பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் அந்தரங்க பகுதியில் தோல் சிவத்தல் மற்றும் தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவதாக அந்தரங்க பகுதிகள் பி.ஹெச் அளவை சமநிலையில் கொண்டுள்ளன. இந்த சமநிலையில் இடையூறு ஏற்படும்போது அதனால் தொற்று, சிவத்தல், தடிப்புகள், வறட்சி மற்றும் அரிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே அந்தரங்க சுகாதாரத்திற்கு விற்கப்படும் பொருட்களை இதற்கு பயன்படுத்துவது நல்லது.

மனைவியின் அந்தரங்க கழுவல்களை பயன்படுத்தலாம்
பெண்களுக்கு அந்தரங்க பகுதிகளைக் கழுவும் தயாரிப்புகள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் ஆணும் பெண்ணும் மாறுப்பட்ட உடலமைப்பை கொண்டவர்கள். எனவே அவர்கள் வெவ்வேறு வகையான தயாரிப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது. ஆண்களின் பி.ஹெச் நிலையானது 5.3 முதல் 5.8 க்குள் இருக்கும். ஆனால் பெண்களுக்கு 3.5 முதல் 4.5 க்குள் இருக்கும். இரண்டு பாலினத்தவர்களுக்குமான தயாரிப்பானது வெவ்வேறு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்புவை வேண்டுமானால் பெண்களுடையதையே ஆண்களும் பயன்படுத்தலாம். ஆனால் அந்தரங்க பகுதிகளுக்கு அது ஒத்து வராது.

அந்தரங்க வாஷ்களை ஃபேஷ் வாஷாக பயன்படுத்தலாம்
அந்தரங்க பகுதிகளை கழுவ பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை முகத்தை கழுவ பயன்படுத்தலாம் என்பது உண்மையே. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எண்ணெய் சருமம் இருக்கிறது எனில் நீங்கள் அதை முகத்தை கழுவ பயன்படுத்தலாம். அந்தரங்கத்தைச் சுத்தப்படுத்தும் தயாரிப்புகள் குறிப்பிட்ட குணங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் அது சருமத்தில் பி.ஹெச் நிலையை சமப்படுத்த உதவுகிறது. ஆனால் அனைவருக்கும் இது ஒத்துவரும் என கூற முடியாது. சிலருக்கு இந்த யோசனை ஒத்து வருவதில்லை. அவர்கள் அந்தரங்க தயாரிப்புகளை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புகளை சந்திக்கின்றனர். எனவே அதை முகத்திற்கு பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.

ஆண்களின் அந்தரங்க சுகாதாரம் குறித்த ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ளன. ஆண்கள் தங்களுக்கான தயாரிப்புகளை தேடி பயனடையலாம். ஆனால் அந்தரங்க சுகாதாரம் முக்கியமான விஷயமாகும். அதை மறக்க வேண்டாம்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment