மன்னாரில் இன்று மேலும் ஒரு கொரோனா மரணம்

Date:

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) காலை மேலும் ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று சனிக்கிழமை (14) காலை உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (13) வரையிலான 13 நாட்களில் 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1244 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 1261 கொரோனா தொற்றாளர் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்