25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஊர்காவற்றுறையில் புதிய கொத்தணி அபாயம்: அனுமதியற்ற இறுதிக்கிரியையால் சர்ச்சை!

யாழ் மாவட்டத்தின், ஊர்காவற்றுறை பகுதியில் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனை பகுதியில் நடமாட்ட தடை பகுதியளவில் அமுல்ப்படுத்தப்படுகிறது.

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனையில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உறவினர்கள். அந்த குடும்பத்தில் ஒருவர் தொற்றுடன் நேற்று முன்தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த குடும்பத்தினருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அதிகாரிகளின் கவனம், கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடந்த மரணவீடு ஒன்று தொடர்பில் சென்றுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 19 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். அவரது இறுதிச்சடங்கு 16ஆம் திகதி நடந்தது. அவரது இறுதிக்கிரியை பற்றிய தகவல்களை  சுகாதார அதிகாரிகள் அறிந்திருக்கவில்லையென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சையளிக்க முடியாதென கைவிடப்பட்ட புற்றுநோயாளியான 19 வயது இளைஞனை, அவரது உறவினர்கள் பூநகரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மத சடங்குகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலும், ஆலயம் ஒன்றிலும் மத சடங்குகள் நடத்தப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடங்குகளின் போது இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞனின் சடலம் ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இளைஞன் புற்றுநோயால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இளைஞனின் இறுதிச்சடங்கு விபரம் பொறுப்பான சுகாதார அதிகாரிகளிற்கு அறிவிக்கப்படவில்லை. இறுதிச்சடங்கு சமயத்தில் கிராமசேவகரும் கொழும்பில் தங்கியிருந்தார்.

இறுதி நிகழ்வில் அந்த பகுதியை சேர்ந்த பெருமளவானர்கள் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த இளைஞனின் சிறிய தந்தை கடந்த 3ஆம் திகதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அதையடுத்து, குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 16 பேருக்கு சந்தேகத்திற்குரிய பெறுபேறு கிடைத்தது.

இதனால் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மீளவும் நடத்தப்பட்ட பரிசோதனையில், 6 பேருக்கு இன்று தொற்று உறுதியானது. சந்தேகத்திற்கிடமான பெறுபேற்றை பெற்றவர்களில் ஏனையவர்களின் மாதிரிகள் நாளை சோதனையிடப்படும்.

உயிரிழந்த இளைஞனின் தாயார், அம்மம்மா, மாமா, மாமி, சித்தப்பாவின் மனைவி, மகள் என அந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் இன்று தொற்றுடன் அடையளம் காணப்பட்டனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு யுவதி தையல் பயிற்சி நிலையத்திற்கு செல்பவர். அங்கு பயிலும் 30 யுவதிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஊர்காவற்றுறையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொற்றடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மெலிஞ்சிமுனை பகுதியில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து வேறு காரணங்களிற்கு நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தொடர்பாளர்களை கண்டறிய, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நலன்களை கவனிக்க அங்கு கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

Leave a Comment