மட்டக்களப்பு மாவட்டத்தில் மத, திருமண, மரண நிகழ்கள் 15 பேரின் பங்குபற்றுதலுடன் மட்டுமே நடைபெற அனுமதியளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டம் நேற்று (13) நடைபெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அனைத்து மத தலங்களில் நடைபெறும் மத நிகழ்வுகள், திருமணம், மரணச்சடங்கில் 15 பேருக்கு மட்டுமே அனுமதியளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் இன்று பகிரங்க அறிவிப்பு விடுப்பார்.




