24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இந்தியா

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ஆந்திர அரசு நிதி உதவி!

ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஹாக்கி வீராங்கனை ரஜினிக்கு ஆந்திர அரசு ரூ .25 லட்சம் நிதி உதவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், எர்ரவாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர் சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியிடம் தோல்வியடைந்த போதிலும் அவர்களின் செயல்திறனால் ரசிகர்கள் மனதை வென்றனர். தொடர்ந்து, ஹாக்கி வீராங்கனை ரஜினி நேற்று தனது பெற்றோருடன் குண்டூரில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார்.

அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஜெகன் வரவேற்றார். அப்போது ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஜினியை ஜெகன் வெகுவாக பாராட்டினார். பின்னர் ரஜினிக்கு மாதம் ரூ .40 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும், திருப்பதியில் 1,000 கஜத்தில் வீட்டு மனைப்பட்டாவும், ரஜினியின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ .25 லட்சம் நிதி உதவியும் வழங்குவதாக அறிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

மகா கும்பமேளாவுக்கு தயாரான பிரயாக்ராஜ்: 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

Pagetamil

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

Leave a Comment