அஜித்தின் ரீல் மகள் ஹீரோயினாக.

Date:

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் அனிகா.

16 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பலனாக அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்