மீண்டும் ஜோடி சேரும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ்!

Date:

இரண்டாவது முறையாக ஜோடி சேரும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ்: படப்பிடிப்பு துவக்கம்!

 தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். பிசியாக படங்கள் இயக்கி வந்தாலும், தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்திய பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 ‘குலேபகாவல்லி’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் பிரபுதேவா. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் ஏற்கனவே லஷ்மி திரைப்படம் வெளியானது.

 அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, ராமர் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். இதற்கு முன்பாக கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த குலேபகாவல்லி படம் போல இந்தப்படமும் காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிறது. பிரபு தேவா நடிப்பில் ஏற்கனவே பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உள்ளிட்ட படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்துள்ளன. இதில் பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிவிடப்பட்டது. பஹீரா படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அண்மையில் வெளியான இந்தப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

 அதேபோல் ஹரஹர மஹாதேவகி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்திலும் நடிக்கிறார் பிரபுதேவா. சந்தோஷின் முந்தைய படங்களை போல் அல்லாமல் முற்றிலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்குமபடியான படமாக இந்தப்படம் உருவாகிறது. அண்மையில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்