தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை!

Date:

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் நேற்று அர்ச்ச னைகள் செய்யப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ்முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் நேற்று ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, பெருவுடையாருக்கு தமிழில் நேற்று அர்ச்சனைகள் நடைபெற்றன. தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி கும்பிட்டனர்.

ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் கருவறைகளிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று தமிழில் அர்ச்சனை செய்யப்பட் டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்