யாழ் நகரத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த இருவர் இன்று பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் கப்பம் பெற்ற இருவர் தொடர்பான முறைப்பாடு பொலிசாருக்கு கிடைத்தது. கடந்த யூலை 31ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
மத்திய பேருந்து நிலைய பழ வியாபாரியிடம் கப்பம் பெற்றுள்ளனர்.
அவர்கள் நகரின் வேறு இடங்களிலும் கப்பம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி இன்று மதியம் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் கப்பம் பெற்ற சம்பவமொன்று சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.
யாழ் நகரில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரும் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் தெல்லிப்பளையை சேர்ந்தவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
1
+1
1
+1
2