தொடங்கியது அதர்வா பட ஷூட்டிங்.

Date:

 இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “தயாரிப்பு எண் 22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது.

தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜெபி, ஆர்.கே. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, ஜி.எம். குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.

ஜிப்ரான் இசையமைக்க, லோகநாதன் (உஸ்தாத் ஹோட்டல் & பரோல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முஹம்மது (எடிட்டிங்), ஜே.கே. ஆண்டனி (கலை), சுப்பு நாராயணன் (நிர்வாக தயாரிப்பாளர்), நட்ராஜ் (உடைகள்), கே.பி. சசிகுமார் (ஒப்பனை), மூர்த்தி மௌலி (ஸ்டில்ஸ்), விவேகா & மணி அமுதவன் (பாடல்கள்), சில்வா (ஸ்டண்ட்ஸ்), பாபி ஆண்டனி (நடன இயக்குனர்) ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்