ஆதிக்கு ஜோடியாகும் நடிகை அக்‌ஷரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Date:

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ராம் போதினேனி நடிக்கும் புதிய படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அண்மையில் நடிகர் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த படத்தின் லேட்டஸ் அப்டேட்டாக நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிகை அக்‌ஷரா கௌடா இணைந்துள்ளார்.

இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய திரைத்துறையில், இளம் உள்ளங்களின் கனவு நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை அக்‌ஷரா கௌடா. தமிழில் அவரது நடிப்பில் “சூர்ப்பனகை மற்றும் இடியட்” திரைப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாகும், உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘RAPO19’ படத்தில், ஆதியின் ஜோடியாக அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக வெளியான, சமீபத்திய அறிவிப்பு டோலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ராம் போதினேனி, கீர்த்தி ஷெட்டி ஜோடியை ஒன்றாகக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தற்போது, ரங்கஸ்தலம், நின்னு கோரி மற்றும் யு-டர்ன் போன்ற திரைப்படங்களில், மாறுபட்ட கதாபாத்திரங்களில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ஆதி பினுஷெட்டிக்கு ஜோடியாக அக்‌ஷரா கௌடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஆதி, எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு அக்‌ஷரா கௌடாவுடன் தீவிரமான காதல் பகுதியும் உள்ளது. நடிகை அக்‌ஷரா கௌடா, இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் தோன்றி, கடப்பா தெலுங்கு மற்றும் மதுரை தமிழ் பேசுவார். நகர்ப்புற மாடர்ன் வேடங்களில் அவரது திறமையைக் கண்ட ரசிகர்களுக்கு, இது மாறுப்பட்ட, தனித்துவமான விருந்தாக இருக்கும்.
இந்த படத்தை ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கீரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். பவன் குமார் படத்தை வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்