26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

குடிநீரை ஆரோக்கியமாக சேமிப்பது எப்படி?..

நீரின்றி அமையாது உலகு என்னும் குறளுக்கு ஏற்ப இந்த உலகமும் நமது உடலும் அதிகமான அளவு நீரால் உருவாகியுள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீர் குடிக்கிறோம் என்பது ஒரு பெரும் கேள்வியாகவே உள்ளது. மக்கள் பலர் தினசரி சரியான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா? என்பதை அறிய வேண்டியது முக்கியமாகும். மேலும் குடிநீரை நாம் எதில் சேமித்து வைத்துள்ளோம் என்பதும் முக்கியமாகும். இப்போது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. பிளாஸ்டிக் கொள்கலனில் வைத்து அருந்தும் நீர் ஆரோக்கியமானதா?

​தண்ணீர் சேமிப்பு

ஆயுர்வேத முறையானது ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். உணவை போலவே தண்ணீரும் உடலால் ஜீரணிக்கப்பட வேண்டும் என அயுர்வேதம் கூறுகிறது. இது ஒரு மாற்று மருத்துவ முறையாக பார்க்கப்படுகிறது. மேலும் தண்ணீரை சரியாக சேமித்து பயன்படுத்துவதன் மூலம் நாம் உடலில் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அதற்கு முதலில் தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என நாம் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரை சில பழங்கால முறைகளை பயன்படுத்தி சேமிப்பதன் மூலம் நாம் நன்மையை பெறலாம்.

மண் பானைகள்

மண்பானையில் தண்ணீரை சேமிப்பது என்பது ஒரு ஆரோக்கியமான முறையாகும். இது இப்போதும் கிராமபுறங்களில் பின்பற்றப்படும் ஒரு முறையாகும். இது தண்ணீரை நாள் கணக்கில் புத்துணர்ச்சியாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். மேலும் மண் பானைகளில் காற்று இடைவெளிகள் இருப்பதால் அவை குளிர்சாதன பெட்டி போல செயல்ப்பட்டு தண்ணீரை குளிர்ச்சியாக்குகின்றன. இதனால் நீரில் அமிலத்தன்மை குறைகிறது. மேலும் இது தோல் பிரச்சனைகளை குறைக்கிறது. உடல் வலிமையை மண் பானை தண்ணீர் மேம்படுத்துகிறது.

​செப்பு பானைகள் நீர் சேமிப்பு

செப்பு பாத்திரங்கள் பயன்படுத்துவது என்பது தமிழர்களின் பழம் பெரும் நாகரிகம் முதலே பயன்பாட்டில் இருந்த ஒரு விஷயமாகும். ஆனால் நாள் கணக்கில் அது தற்சமயம் காணாமல் போய்விட்டது. இப்போது வந்த பிளாஸ்டிக் குடங்களின் வருகையும் அதற்கு முக்கிய காரணமாகும். செப்பு பானைகளில் சேமித்த நீரை அருந்துவதன் மூலம் செரிமான சக்தி அதிகரிக்கிறது

​உடலை சமநிலைப்படுத்துகிறது

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் சில நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் செப்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக இரத்த போக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என கூறப்படுகிறது.

அதே போல உணவு சமைக்கவோ, பால் அல்லது மற்ற திரவங்களை கொதிக்க வைக்கவோ செப்பு பாத்திரங்களை பயன்படுத்த கூடாது.

இப்படியாக ஆரோக்கியமான முறையில் நீரை சேமிப்பது மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். இந்த குடிநீரும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment