திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் ஆனந்தி, டைட்டானிக், ஏஞ்சல், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘கயல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆனந்தி. பின் விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி என்று தொடர்ந்து அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆனந்தி, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் டைட்டானிக், ஏஞ்சல், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்கள் உள்ளன.
இதுதவிர தெலுங்கில் ‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுதீர் பாபு இயக்கும் படத்தில் நடிகை ஆனந்தி, கிராமத்தில் சோடா கம்பெனி நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். காதலும், காமெடியும் கலந்த படமாக தயாராகும் இதில் சூரி பாபு ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.