தனிமைப்படுத்தல“ விதிகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஒக்டோபரில் இருந்து 53,143 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்கு மாகாண எல்லையை கடக்க முயன்ற 2,999 வாகனங்களில் பயணித்த 5,494 பேர் நேற்று பொலிசாரால் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக எல்லையை கடக்க முயன்ற 103 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.




