குழந்தைகளுக்கு வீட்டு வேலையை பழக்க இவ்வாறு செய்தலே போதும்!

Date:

குழந்தைகளை வீட்டு வேலைகளில் எந்த வயதில், எப்படிப் பங்கெடுக்கச் செய்யலாம்?

குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வேண்டும். ”

சிறு குழந்தைகள் உள்ள வீட்டில், வீட்டு வேலைகள் நேரத்துக்கு நடக்காது. பொருள்களும் பொம்மைகளும் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிக் கிடக்கும். பொருள்களைச் சீராக அடுக்கி வைக்க சம்பளத்துக்கு ஆள்போடலாமா என்று கூட தோன்றும். குழந்தைகள் வளர்ந்த பின்னும் பல வீடுகளில் நிலைமை இதுதான். எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நிறைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிவதில்லை என்று சொல்வதை விடப் பழக்கப்படுத்தவில்லை என்பது சரி. சிறு வயதிலேயே பழக்கப்படுத்துகிற செயல்கள்தாம் பெரியவர்களாகும்போதும் தொடரும்.

“பெண்ணோ, பையனோ … நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது மிகவும் அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபட வேண்டும். , உனக்கு எட்டாது, கைல குத்திப்பே … அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத ‘என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.

இந்த வயதில் குழந்தைகளின் கைகள் அத்தனை பலம் வாய்ந்ததாக இருக்காது. அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பயமே நம்மை அப்படி எண்ண வைக்கிறது. குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடிந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். குழந்தைகளின் இரண்டு வயதில் ஆரம்பித்து `உன் பொம்மையை எல்லாம் கூட போடு தங்கம், டாய்ஸ் எல்லாத்தையும் உன் அலமாரியில் அடுக்கி வை’ என்பது போன்ற எளிய வேலைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.

வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றவற்றை, சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்து சென்று, சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கே நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துதல். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம் ‘என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.

3 வயதுக் குழந்தையில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடல்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.

8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மாத்திரை எடுத்து தருவது, சாப்பிட்ட அவர்களுடைய இடத்தைச் சுத்தம் செய்வது, அவர்களைக் கவனித்து கொள்ளப் பழக்கப்படுத்தலாம்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்