தன் குழந்தைக்கு அழகான பெயரை வைத்த சிவகார்த்திகேயன்!

Date:

தன் அப்பாவே மகனாக பிறந்து வந்ததாக சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஜூனியருக்கு பெயர் வைத்துவிட்டார். சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்கிற மகள் இருக்கிறாள். விரைவில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆர்த்தி ஜூலை 12 ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மகன் தன் விரலை பிடித்ததை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிவகார்த்திகேயன் கூறியதாவது, 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக … என் பல வருட வலி தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என்றார்.சமீபத்தில் தன் செல்ல மகனுக்கு பெயர் வைத்தது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் மகனுக்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்

“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம் என அழைக்கப்படும் சிவகார்த்திகேயன். அவரின் அப்பாவின் பெயர் தாஸ். அப்பாவே மகனாக வந்திருப்பதால் ஜூனியருக்கும் தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் குகன் தாசை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தான் பெரிய ஆளாகி பிரபலமாக இருப்பதை பார்க்க அப்பா உயிருடன் இல்லையே என்று சிவகார்த்திகேயன் இத்தனை வருடங்கள் கலங்கினார். சமீபத்தில் அப்பா மீண்டும் வந்தார்.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ‘டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு’ திறந்து வைப்பு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்