மட்டக்களப்பில் 35 வருடங்களின் பின் இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று கும்புறுமூலை இராணுவ முகாமில் நடைபெற்றது.

இதில் 7 ஏக்கர் அரச காணி பிரதேச செயலாளரிடமும், தனியாருக்கு சொந்தமான 5 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை, கிரான் பிரதேச செயலாளர்களான கோ.தனபாலசுந்தரம்,எஸ்.ராஜ்பாபு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்த காலத்தில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இவ் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. 1980 காலப் பகுதியில் இராணுவ முகாம் அமைந்த காணியின் ஒரு பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனம் அமைந்திருந்தபோதிலும் அது செயல்படாத நிலையில் விசேட அதிரடிப் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்தது.

அக்காணியானது தற்போது கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் அப்பகுதியில் வழமைபோல் செயல்பட்டு வரும் வீதி சோதனைச் சாவடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்