Pagetamil
சின்னத்திரை

தாலியை கழட்டிவைத்து விட்டு வந்த “குக் வித் கோமாளி” பிரபலம் …

குக் வித் கோமாளி 2 எம் சீசனில் பங்கேற்ற கனி எப்போதும் தாலி அணியாமல் இருப்பது பற்றி ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதிலை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர். தாலி கட்டுவது தமிழர் மரபில் இல்லை, அது இடையில் வந்தது. என் புருஷன் கட்டாத தாலியை ஏன் நான் போட்டிருக்கனும்? ’கனி கேள்வி ….

குக் வித் கோமாளி மூலம் பாப்புலர் ஆனவர் கனி. இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்தவர். குக் வித் கோமாளியில் அவர் அதிகம் காரக்குழம்பு தான் செய்து அகட்டினர் என்பதால் அவரை காரக்குழம்பு கனி என்றும் நெட்டிசன்கள் அழைத்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனியாக யூட்டியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் அவருக்கு அதிகம் ஒரு விஷயம் பற்றி கேள்விகள் வருகிறது என சொல்லி லைவ் வீடியோவில் பேசுகிறார் கனி. அவர் ஏன் தாலி போடுவதில்லை என்கிற கேள்வி தான் அது. “தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம், இடையில் புகுத்தப்பட்டது என நான் நம்புகிறேன். தமிழ் மரபு உள்ள மனதிற்கு பிடித்தவர்கள் மாலை மாற்றி இவன் என் துணை என சொல்லி வாழ தொடங்குவது தான் நான் உறுதியாக நம்புகிறேன்.”
“நான் தாலி கட்டிதான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்தது அது. எனக்கு மஞ்சள் நிற தாலி அதிகம் பிடிக்கும். அதற்கு பிறகு அதை மாற்றி காட்டுவார்கள். அதை கட்டியது என் புருஷன் இல்லை, நிறைய சொந்தக்காரர்கள் தான் கட்டுவார்கள். அதை என் புருஷனுக்கு பதில் வேறு யாரோ போட்ட மூன்று முடிச்சு ஏனெனில் அது எனக்கு அதன் மீது ஈடுபாடு இல்லாமல் போனது. ”
“என் புருஷன் எனக்கு கட்டிய மஞ்சள் தாலியை நான் பத்திரமாக உயிர் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

ஒருவரது கேரக்டரை நிர்ணயிப்பது தாலி இல்லை. என் கணவருடன் 8 வருடம் லவ், 12 வருடம் திருமண வாழக்கை என சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தை உள்ளது. இதை எல்லாம் விட கல்யாணம் ஆகிவிட்டது என சொல்ல வேறு எந்த அடையாளமும் தேவையில்லை. ”
“நான் விடியோவுக்கு மட்டும் தாலி போட்டுகொண்டு மற்ற நேரத்தில் அதை கழட்டி போட்டுவிட்டு போகலாம். ஆனால் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை. இது தான் என் நிலைப்பாடு” என கனி கூறி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடி நடிகர்.. கேரவனுக்கு இரகசியமாக அழைத்த நடிகை!

Pagetamil

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

‘யானை மிதித்து சாகக் கிடந்தேன்… தூக்கிச் சென்றவன் என் மார்பை பிடித்து சுகம் கண்டான்’: பிரபல தமிழ் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

Pagetamil

கணவனை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்

Pagetamil

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் மரணம்

Pagetamil

Leave a Comment