அம்பாறை மாவட்ட முன்னாள் அமைச்சரின் மகனுடன் உறவிலிருந்த வெளிநாட்டு யுவதி தற்கொலை!

Date:

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சரின் மகனுடன் உறவு வைத்திருந்த நேபாள பெண் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவர் ‘திலயா’ என அடையாளம் காணப்பட்டார்.

இறந்த யுவதி நேபாளத்தில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு கிளப்பில் சில காலம் பணியாற்றி வந்தார். அத்துடன் அமைச்சரின் மகனுடன் சிறிது காலம் உறவு கொண்டிருந்தார்.

யுவதியுடனான உறவை தொடர்ந்து, முன்னர் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து அழைத்து வந்து வெள்ளவத்தையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு யூனிட்டை வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

29 ஆம் திகதி மாலை யுவதி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்..

வெள்ளவத்தை போலீசார் உடலை மீட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாவில்லை.

அவர் 3 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் வசிக்க வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அமைச்சரின் மகன் அவ்வப்போது அங்கு வந்து தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் கட்சி அமைப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சரின் மகன் விசாரிக்கப்பட உள்ளார்.

உடல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்