29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
மலையகம்

தலவாக்கலையில் ஓய்வுபெற்ற பெண் அதிபர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கொட்டகலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை பகுதியில் நேற்று (30) கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

தலவாக்கலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கடுமையான சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கொரோனா பிரிவிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment