அனைத்து பங்காளிகளும் சென்று எதிரணியுடன் இணைந்தாலும் கவலையில்லை!

Date:

அரசாங்கத்தை விட்டு வெளியே செல்ல விரும்பினால், யார் வேண்டுமானாலும் செல்லலாம். அந்தக் கட்சிகள் அனைத்தும் சென்றாலும் நாங்கள் அரசாங்கத்தை கொண்டு நடத்துவோம் என தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த.

நேற்று பிற்பகல் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெளியே செல்ல விரும்பும் யாராவது இருந்தால், யார் வேண்டுமானாலும் வெளியே செல்லலாம், அந்த கட்சிகள் எல்லாம் சென்று மறுபுறம் உட்கார்ந்தாலும் அரசாங்கத்தை கொண்டு நகர்த்துவோம்.

அனைத்து சிறிய கட்சிகளும் ராஜபக்ச அரசின் கதவுகளைத் தாண்டி அமைச்சர் சம்பளத்தை அனுபவிக்காமல் போகலாம்.

ஸ்ரீ.ல.சு.க.வில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள். கூச்சலிட்டவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அடிக்கடி கூச்சலிடுகிறார்கள் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்