Pagetamil
இலங்கை

இன,மத பேதமில்லாமல் பணியாற்றுவேன்: வடக்கின் புதிய பிரதம செயலாளர்!

வவுனியா அரச அதிபராக கடமையாற்றி வடமாகாண பிரதமசெயலாளராக பதவி உயர்வுபெற்றுச்செல்லும் சமன் பந்துலசேனவிற்கு வவுனியாவில் இன்று வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழ்விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக வவுனியா மாவட்ட செயலக வாயிலில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட பிரதம செயலாளருக்கு மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், சமூக ஆர்வலர்கள், பொதுஅமைப்புக்கள், அரச உயர்அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரச அதிபராக கடமையாற்றிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எனக்கு பக்கபலமாக செயற்ப்பட்ட அரசஅதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.வடக்கின் பிரதம செயலாளராக கடமை ஏற்கவுள்ள நிலையில் வடமாகாண மக்களுக்கு இனமத பேதமற்று எனது சேவையை பணிகளை முன்னெடுப்பேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment