26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
உலகம்

தாயாரை நினைத்து கண்கலங்கிய இளவரசர் ஹாரி!

எனக்காவது எனது மனைவி அருகில் உள்ளார். ஆனால், எனது தாய் தனியாகவே பிரச்சினைகளை (பத்திரிகைகள் தந்த மன அழுத்தம், விவாகரத்து) எதிர்கொண்டார் என்று இங்கிலாந்து இளவரசர் ஹாரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

ஹாரி – மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் – மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி மார்ச் 7ஆம் திகதி வெளியாகிறது.

ஹாரி – மேகன் மார்கலின் நேர்காணல் குறித்த வீடியோ தொகுப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

30 நொடிகள் உள்ள அந்த வீடியோவில் ஹாரி பேசியுள்ளதாவது:

“எனது மிகப்பெரிய கவலையான வரலாறு திரும்பியது. எங்கள் இருவருக்கும் இது மிகக் கடினம். நான் எனது மனைவியின் அருகில் அமர்ந்து பேசுவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு எனது மனைவி உள்ளார். நாங்களாவது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறோம். எனது தாயார் அவர் வாழ்நாளில் அவர் சந்தித்த பிரச்சினைகளை (பத்திரிகைகள் தந்த மன அழுத்தம், விவாகரத்து) தனியாகக் கடந்து வந்ததை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார்.

இந்த நேர்காணலில் ஹாரி தனது தாயாரான இளவரசி டயனா குறித்தும், அரச குடும்பத்திலிருந்து விலகியதற்கான காரணங்கள், பத்திரிகைகள் தந்த தொந்தரவுகள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Update 2 – தென்கொரிய விமான விபத்து

east tamil

தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி

east tamil

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

Leave a Comment