இராவணன் புஷ்பக விமானத்தை நிறுத்திய இடத்தில் தோன்றிய முகத்தால் பரபரப்பு!

Date:

பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள கற்பாறையில் மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுவதாக சுவர்ணவாஹிணி செய்தி வெளியிட்டுள்ளது.

இது இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என கருதும், பிரதேச மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்ததை தொடர்ந்து, ஊடகங்களின் கவனம் அங்கு குவிந்தது.

குறித்த கற்பாறையிலுள்ள ஒரு பகுதி இயற்கை காரணங்களினால் உடைந்து விழுந்துள்ளது. உடைந்த பகுதியிலேயே மனித முகத்தையொத்த தோற்றம் தென்படுகிறது.

இது இராவணனின் முகம்தான் என உள்ளூர் மக்கள் அடித்து சொல்கிறார்கள்.

இப்பகுதியிலேயே இராணவன் புஷ்பக விமானத்தை நிறுத்தியுள்ளார் எனவும், அண்மித்த பகுதியிலுள்ள குகையிலேயே சீதையை மறைத்து வைத்திருந்தார் எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் புராணக் கதைகளை மேற்கோள்காட்டி, தமது நம்பிக்கையை நியாயம் செய்து வருகின்றனர்.

அந்த பகுதியை பார்வையிட பெருமளவானர்கள் குவிந்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்